முதல் நாளே மாஸ் காட்டிய நானி, எஸ் ஜே சூர்யா படம்!

vinoth

சனி, 31 ஆகஸ்ட் 2024 (08:21 IST)
நானி, பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் பான் இந்தியா படமான 'சரிபோதா சனிவாரம்' படம் நேற்று ரிலீஸாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'சரிபோதா சனிவாரம்' திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நேற்று வெளியானது.

மாஸ் மசாலா ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் வெகுஜன சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் கோபப்படும் ஆக்ரோஷ இளைஞராக நானி இந்த படத்தில் நடித்துள்ளார். மிரட்டலான வில்லனாக எஸ் ஜே சூர்யா வழக்கம் போல அப்லாஸ் அள்ளுகிறார்.

இந்நிலையில் பாசிட்டிவ்வான விமர்சனம் பெற்ற இந்த படம் முதல் நாளில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 90 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்