ஷூட்டிங்கிற்காக சேலம் - ஏற்காடு சாலையில் சென்றுகொண்டிருந்த நமீதாவின் காரை தேர்தல் பறக்கும்படையினர் சோதனையிட்டிருக்கின்றனர். அப்போது பறக்கும்படையினருக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் நான் யாரென்று தெரியுமா என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், போலீசார் இந்த சம்பவத்தை வேறுவிதமாக ஊதிப் பெரிதாக்கிவிட்டதாக நமீதாவின் கணவர் வீரா விளக்கமளித்திருக்கிறார்.
ஏற்காட்டில் படப்பிடிப்புக்காக காரில் சென்றோம். இரவு 2.30 மணி அளவில் காரின் பின் இருக்கையில் நமீதா தூங்கிக்கொண்டு இருந்தார். சேலத்திலும் தேர்தல் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை போட்டனர். அதில் ஒருவர் குரூரமாக நடந்து கொண்டார். நமீதாவின் கைப்பையை சோதனை செய்ய வேண்டும் என்றார். அதில் தனிப்பட்ட சில பொருட்கள் இருந்ததால் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர்தான் சோதனை செய்யவேண்டும் என்று நமீதா வாதாடினார். அப்படி சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. இதனால் நமீதா அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார் என்று தவறாக பகிரப்பட்டு வருகிறது என்று வீரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.