பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த நகுலுக்கு அழகிய மகள் உள்ளார். தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வரும் அவர் தற்போது தன் செல்ல மகள் அகிராவை தூக்கி வைத்துக்கொண்டு பாடல் பாடி கொஞ்சிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.