அவர் மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சிதான்…. நாக சைதன்யா கருத்து!

சனி, 15 ஜனவரி 2022 (11:19 IST)
நடிகர் நாக சைதன்யா முதல் முதலாக சமந்தா உடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் ரசிகர்களும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முதல் முதலாக விவாகரத்து குறித்து நாக சைதன்யா மௌனம் கலைத்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘இருவரும் பிரிந்திருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் இருவரின் மகிழ்ச்சிக்காக சேர்ந்து எடுத்த முடிவுதான். அவர் மகிழ்ச்சியாக இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். சில சூழ்நிலைகளில் விவாகரத்துதான் சிறந்த முடிவு’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்