நடிகர் சங்க தேர்தலுக்கு தடை - ராதாரவி தரப்புக்கு மேலுமொரு பின்னடைவு

செவ்வாய், 7 ஜூலை 2015 (15:58 IST)
இந்த மாதம் 15 -ஆம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தயிருப்பதாக தற்போது தலைவராக இருக்கும் சரத்குமார் தலைமையிலான அணி அறிவித்தது. அவர்களே, தேர்தல் அதிகாரிகளாக இரு வழக்கறிஞர்களை நியமித்தனர்.
சங்க தேர்தலில் ஓட்டு போடும் உரிமை உள்ள உறுப்பினர்களின் விவரம் உள்பட எதையுமே சரத்குமார் அணியினர் எதிரணியினருக்கு தரவில்லை. வேலை நாளில் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் தரப்பினர் நீதிமன்றம் சென்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தார்.
 
அதனை எதிர்த்து ராதாரவி மேல்முறையூடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் கவுள் மற்றும் சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், நடிகர் சங்கத் தேர்தலுக்கான தடையை நீக்க முடியாது, மேலும் இந்த மாதம் 28ம் தேதிக்குள் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக இதில் சம்பந்தப்பட்ட அனைத்து சங்கங்களும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்