மிஷ்கின் உதவியாளரைப் பாராட்டிய ரஜினி

புதன், 19 ஏப்ரல் 2017 (12:17 IST)
மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள ‘8 தோட்டாக்கள்’ படத்தைப் பார்த்த ரஜினி,  அவருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.

 
புதிதாக வேலைக்குச் சேரும் சப்-இன்ஸ்பெக்டரிடம், 8 தோட்டாக்கள் நிரம்பிய துப்பாக்கி ஒன்று தரப்படுகிறது. தன்னுடைய  கவனக்குறைவால் அதைத் தொலைத்து விடுகிறார் எஸ்.ஐ. அதைக் கண்டுபிடிக்க அவர் படும் கஷ்டங்கள்தான் படத்தின் கதை.  முழுநீள க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்தில், புதுமுகங்கள் வெற்றி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்திருந்தனர். அத்துடன், நாசர், எம்.எஸ். பாஸ்கர் போன்ற சீனியர் நடிகர்களும் நடித்துள்ளனர். 
 
விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ரஜினி, படத்தைப் பார்க்க விரும்பியிருக்கிறார்.  எனவே, அவருக்காக ஸ்பெஷலாக பார்க்கும்படி படத்தை அனுப்பியிருக்கின்றனர். படத்தைப் பார்த்த ரஜினி, இயக்குநருக்கு  போன் செய்து, ‘பாராட்ட வார்த்தைகளே இல்லை. நீங்க ஜெயிச்சிட்டீங்க’ என்றாராம். அத்துடன், நாசர் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் இருவரின் நடிப்பையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் ரஜினி. ஆனால், இந்தப் படத்துக்குப் போதுமான  தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தம். 

வெப்துனியாவைப் படிக்கவும்