இன்று மிஷ்கின் இசையமைக்கும் டெவில் படத்தின் இசை வெளியீடு!

வெள்ளி, 3 நவம்பர் 2023 (14:14 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் பேசுபொருளாக இருக்கும். அது இளையராஜா இசை அமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின்.

இந்நிலையில் அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். டெவில் படத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கலவி பாடல் என்ற முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இன்று மாலை டெவில் படத்தின் இசை வெளியீடு நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் பாடல்களை மிஷ்கின் முன்னிலையில் இசைக்கலைஞர்கள் இசைத்து பாட உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்