ரஜினியின் அறிமுகப் பாடல்களில் மிகவும் ஹிட்டான பாடல்களில் ஒன்று, அண்ணாமலையில் வரும், வந்தேண்டா பால்காரன். தேவா ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இசையமைத்திருப்பார். இந்தப் பாடலை, ரஜினியை கலாயக்கும் படத்தில், வந்தேண்டா பவர்காரன் என்று கொத்துக்கறி போடவிருக்கிறார்கள்.
லிங்காவுக்கு நஷ்டஈடு கேட்டு போராடிய சிங்காரவேலன் கடைசி அஸ்திரமாக, ரஜினியை விமர்சிக்கும் படம் ஒன்றை எடுக்கிறார். பவர் ஸ்டார் என அழைக்கப்படும் சீனிவசான் ரஜினியை பிரதிபலிக்கும் வேடத்தில் நடிக்கிறார். சீனிவாசன் நடிக்கும் ஒரு படம் தோல்வியடைகிறது. அதனால் விநியோகஸ்தர்கள் நஷ்டப்படுகிறார்கள். அவர்கள் எப்படி சீனிவாசனிடமிருந்து நஷ்டஈடை பெறுகிறார்கள் என்பதுதான் கதை.