முருகதாஸ், மகேஷ்பாபு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (18:03 IST)
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துவரும் தெலுங்கு, தமிழ் இருமொழிப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் அகிரா படத்தை இயக்கிய முருகதாஸ், மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்கு, தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.
மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படமான இதற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்.
இந்தப் படத்தை ஜுன் 23 வெளியிடுவதாக முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.