புதிய முக்காலா பாடல்… பழைய அதே பிரபுதேவா – கலக்கும் ஸ்ட்ரீட் டான்ஸர் டிரைலர் !

வியாழன், 19 டிசம்பர் 2019 (08:18 IST)
பிரபுதேவா நடித்திருக்கும் ஸ்ட்ரீட் டான்ஸர் படத்தில் அவரது புகழ்பெற்ற பாடலான முக்காலா ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

பிரபுதேவா கௌரவ வேடத்தில் நடித்துள்ள ஸ்ட்ரீட் டான்ஸர் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தை ரெமே டி ஸோசா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் 25 வருடங்களுக்கு முன்னர் பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் இடம்பெற்ற முக்காலா முக்காபுலா பாடல் ரிமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியான டிரைலரில் அந்த பாடலின் சில பகுதிகள் இடம்பெற்றது. 3 டியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் பிரபுதேவாவின் நடனத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்