வி…..ம் – டிவிட்டரில் இந்த ஆண்டு அதிகமுறை பயன்படுத்த வார்த்தை இதுதான் !

புதன், 13 நவம்பர் 2019 (15:42 IST)
டிவிட்டரில் இந்த ஆண்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக அஜித் நடித்த படத்தின் பெயரான விஸ்வாசம் இருக்கிறது.

டிவிட்டர் நிறுவனம் தங்கள் வலைதளத்தில் இந்த ஆண்டில் இதுவரை அதிகமாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை குறித்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியான அஜித்தின் திரைப்படத்தின் பெயரான விஸ்வாசம் என்ற வார்த்தையைதான் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் மக்களவைத் தேர்தல் 2019, கிரிக்கெட் உலகக்கோப்பை 2019, ஹேப்பி தீபாவளி ஆகியவை உள்ளன.

இருப்பினும் இந்த முடிவு ஆண்டின் முதல் அரையாண்டை மட்டுமே எடுத்துக்கொண்டு வெளியிடப்பட்டதாகும் என அறிவித்துள்ளது டிவிட்டர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்