முதல்வரை கேலி செய்யும் படம் - நோ சொன்ன மோகன்லால்

வெள்ளி, 29 மே 2015 (15:43 IST)
கேரளாவில் பதவியில் இருக்கும் முதல்வரையே சினிமாவில் கிண்டலும் கேலியும் செய்வார்கள். முதல்வரைப் போன்று வேடமணிந்தவரை நடிக்க வைப்பதும் உண்டு. படங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று கட்சிகளின் பெயர்கள் கொடியுடன் இடம்பெறும்.
 
இந்த சங்கதிகள் எல்லாம் தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை. மோகன்லால் இதற்குமுன் லால் சலாம், இனியெங்கிலும் போன்ற பல அரசியல் படங்களில் நடித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ, மந்திரிகளை அடிப்பதுபோல்கூட நடித்துள்ளார்.
 
ஐவி சசி இயக்கும் புதிய படத்தில் கேரளா முதல்வர் உம்மன் சாண்டியை கிண்டல் செய்யும் காட்சிகள் வருகின்றன. அந்த காரணத்துக்காக அப்படத்தில் நடிக்க மோகன்லால் மறுத்தார். இத்தனைக்கும் லாலின் கரியரில் மறக்க முடியாத இனியெங்கிலும், தேவாசுரம் போன்ற படங்களை இயக்கியவர் ஐவி சசி என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்