வெளிநாட்டில் நடந்ததை உள்ளூர் அரசியலோடு முடிச்சுப்போடுவதா சரியா? திரௌபதி இயக்குனர் பகிர்ந்த வீடியோவால் சர்ச்சை!

திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:25 IST)
இயக்குனர் மோகன் ஜி தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

திரௌபதி படம் சர்ச்சைகளை கிளப்பியதன் மூலம் தமிழகத்தில் பிரபலமானார் இயக்குனர் மோகன். அது முதல் சமூகவலைதளங்களில் அரசியல் கருத்துகளை பேசி வருகிறார். சமீபத்தில் கூட ராமர் கோவில் விஷயத்தில் இயக்குனர் மணிரத்னத்தை கேலி செய்யும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இப்போது வெளிநாட்டு ஷாப்பிங் மால் ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் சிலர் அங்கு வைக்கப்பட்டு இருக்கும் விநாயகர் சிலைகளை உடைப்பது போன்ற வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ‘இதெல்லாம் நல்லதா.. மக்களுக்குள் பிளவு உண்டு பண்ணவே இதெல்லாம் பண்றாங்க போல.. அமைதி மார்க்கத்தில் இப்படியும் சில பதர்கள்..’ எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற எந்த தகவல்களும் அதில் இல்லை.

இதையடுத்து பலரும் அவருக்கு பதிலளிக்கும் வகையில் ‘அது வெளிநாட்டில் எடுக்கப்பட்டது. அதை வைத்து ஏன் உள்ளூர் அரசியலில் சர்ச்சைகளை உண்டாக்குகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். விரைவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்