நடிகர் விஷால் ஒரு பொறுக்கி... இயக்குநர் மிஸ்கின் ஆவேசம் !

வியாழன், 12 மார்ச் 2020 (20:12 IST)
நடிகர் விஷால் ஒரு பொறுக்கி... இயக்குநர் மிஸ்கின் ஆவேசம் !

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கி வந்த துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகவும், இந்த படம் குறித்து விஷால்-மிஷ்கின் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  இந்த படத்தில் இருந்து விஷால், மிஷ்கினை நீக்கி விட்டதாகவும்  கூறப்பட்டது.
 
இதனையடுத்து, மிஸ்கினும், விஷாலும் ஒருவருக்கொருவர்  அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
 
இந்நிலையில் இன்று கண்ணாமூச்சி என்ற வெப் சீரிஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் விஷால் மீது மிஸ்கின் அடுக்கடுக்கன குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
 
அதில், நான் 13 லட்சம் படப்பிடிப்புக்கு செலவழித்ததாகக் கூறியது எல்லாம் பொய்புகார். நான் இதுவரை 7 லட்சம் மட்டும் தான் செலவு செய்துள்ளேன்.
 
விஷால் எனக்கு துரோக செய்துவிட்டான். என் அம்மாவை வேசி என பேசினான்... என்று கூறியவர், விஷாலை பொறுக்கி என திட்டியுள்ளார்.
 
விஷால் மற்றும் மிஸ்கினுக்குமான பிரச்சனை கோலிவுட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்