ஹீரோயினுக்கு ஏத்த அத்தனை அம்சங்களும் கொண்டு டிக் டாக்கில் வித விதமான வீடியோ வெளியிட்டு பேமஸ் ஆனவர் மிருணாளினி. இருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது. குறிப்பாக ரீல்ஸ் வீடியோக்களுக்கு ரியல் ஹீரோயின்கள் போன்று நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்திழுப்பார்.
அதன் பின்னர் தெலுங்கு தமிழ் சினிமாக்களில் இருந்து நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வர தமிழில் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் , எனிமி , எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஆரஞ்சு நிறத்தில் கவர்ச்சி உடையணிந்து கிளாமர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார்.