கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சினிமா பிரபலங்களும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மிலிந்த் சோமன். சினிமா மட்டுமல்லாது மாரத்தான் ஓட்டம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றிலும் பலருக்கு பயிற்சி வழங்கி வந்த மிலிந்த் சோமனுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.