எம்.ஜி.ஆர் மகன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

சனி, 29 ஆகஸ்ட் 2020 (10:57 IST)
சிவகார்த்திகேயனை வைத்து வரிசையாக வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். இதில் கடைசியாக வெளிவந்த சீமராஜா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து பொன்ராம் தனது அடுத்தபடத்தை சசிகுமாரை வைத்து எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் சசிகுமாரோடு சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி தாசன் இசையமைபாளராக அறிமுகமாகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கில் பட வேலைகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. [பின்னர் கொரோனா ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. கொரோனா பிரச்னைகள் முடிந்ததும் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

ITS OFFICIAL: #MGRMAGAN CENSORED WITH ‘U’ CERTIFICATE.@Screensceneoffl @SasikumarDir #Sathyaraj Sir @thondankani #saranya mam @mirnaliniravi @vinothrsamy @AnthonyInParty @g_durairaj @vivekharshan @sidd_rao @senthilkumarsmc @onlynikil pic.twitter.com/Lqn8UsMCMg

— ponram (@ponramVVS) August 28, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்