'மெர்சல்' தெலுங்கு டைட்டில் தேதி அறிவிப்பு! தெலுங்கிற்கு புதிய ஃபர்ஸ்ட்லுக்கா?

சனி, 24 ஜூன் 2017 (06:01 IST)
இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செக்ண்ட லுக் சமீபத்தில் வெளியாகி டுவிட்டரில் பல சாதனைகள் படைத்தது. டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கிற்கு கிடைத்த அமோக வரவேற்பால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.



 


இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் தெலுங்கு ஃபர்ஸ்ட்லுக் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகிறது. மேலும் தெலுங்கிற்கு என தனி ஃபர்ஸ்ட்லுக் தயாராகி இருப்பதாகவும், இதனால் தெலுங்கு மாநில ரசிகர்களுக்கு 'மெர்சல்' தரப்போகும் பிரத்யேக பிறந்த நாள் பரிசாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தை போலவே தெலுங்கிலும் விஜய்க்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் இந்த படம் தெலுங்கு மாநிலங்களிலும் நல்ல விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்