பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.
இதையடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் சர்ச்சையாக பேசி விமர்சனங்களுக்குள்ளாகுவதை வழக்கமான ஒன்றாக வைத்துள்ள மீரா மிதுன், தாது ட்விட்டரில் " தமிழ்நாடு தமிழர்களுக்கு, இந்துகளுக்கானது. ஆனால் மலையாளிகளும், கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தி ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள். மதுரையை எரித்த கண்ணகி போன்று எனக்கு கோபம் வந்தால் நானும் தமிழகத்தை எரித்திடுவேன்.
மேலும், தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது. உங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நான் பத்திரமாக இருக்கிறேன். கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் என் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள்? சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.