அடடா... அபாராம்... அட்டகாசம்... இந்தி த்ரிஷியத்தை புகழும் ஊடகங்கள்

வெள்ளி, 31 ஜூலை 2015 (20:06 IST)
மலையாள த்ரிஷ்யம் சரித்திரம் படைக்கிறது. ஒரு படம் நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு நான்கிலும் வெற்றி பெறுவது அரிதாக நிகழும் சம்பவம். த்ரிஷ்யம் அதனை சாதித்துள்ளது.
 

 
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் பிறகு தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. இரு மொழிகளிலும் படம் வெற்றி. சமீபத்தில் கமல் நடிப்பில் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி இங்கும் வெற்றி பெற்றது. இன்று இந்தியில் த்ரிஷ்யம் என்ற பெயரில் அஜய்தேவ் கான் நடிப்பில் வெளியாகியுள்ளது.
 
இந்தி த்ரிஷ்யத்தின் ப்ரீமியர் ஷோ முன்பே நடத்தப்பட்டதால் பல இணையதளங்களில் நேற்றே விமர்சனங்கள் வெளிவந்தன. அனைத்து விமர்சனங்களும் படத்தை பாராட்டியுள்ளன. முக்கியமாக திரைக்கதையையும், அஜய்தேவ் கானின் நடிப்பையும். 
 
இன்று வெளியான த்ரிஷ்யம், காலைக் காட்சியில் 20 முதல் 25 சதவீத பார்வையாளர்களை மட்டுமே பெற்றதாக மும்பை தகவல்கள் கூறுகின்றன. படம் குறித்த நேர்மறை விமர்சனங்களால் இரவுக் காட்சிக்கு அதிக பார்வையாளர்கள் வரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தியிலும் படம் வெற்றி என்பதை விமர்சனங்கள் உறுதி செய்கின்றன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்