‘மீ டூ’வால் சிறு பாலியல் சம்பவம் கூட இல்லாமல் சுத்தமாக மாறும்: இலியானா
புதன், 14 நவம்பர் 2018 (10:30 IST)
தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், மீடு புகார் தொடர்பாக அதிரடியின கருத்தை தெரிவித்தார்.
" ‘மீ டூ’வில் நிறைய பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த தொல்லைகளை சொல்கிறார்கள். இது நல்ல மாற்றத்தை கொண்டு வரும். பெண்கள் பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது.
‘மீ டூ’ போராட்டத்தினால் நிறைய இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு குழுக்கள் அமைத்து இருக்கிறார்கள். ‘மீ டூ’வால் எதிர்காலத்தில் சினிமா துறை சிறு பாலியல் சம்பவம் கூட இல்லாமல் சுத்தமாக மாறும் என்று நம்புகிறேன்.
எனது திருமணம் குடும்பம் உள்ளிட்ட சொந்த விஷயங்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை. எனது நண்பர் ஆண்ட்ரூவுடன் உறவு விஷயத்தில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றார்.