அனைத்து அம்சங்களுடன் கூடிய மாஸ் படம்: விக்ரம் வேதாவுக்கு ரஜினி பாராட்டு
புதன், 26 ஜூலை 2017 (22:51 IST)
விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிடைத்துள்ளது.
ஜிஎஸ்டி வரியால் ஏற்பட்ட திரையரங்கு கட்டணத்தையும் மீறி இந்த படத்தை பார்க்க திரையரங்கூகளுக்கு பார்வையாளர்கள் குவிந்தனர்
இந்த நிலையில் இன்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
விக்ரம் வேதா' படத்தை பார்த்து வெளியே வந்தவுடன் இயக்குனரகள் தம்பதி புஷ்கர்-காயத்ரியை நோக்கி 'அனைத்து அம்சங்களுடன் கூடிய மாஸ் படம்' என்று ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினியின் பாராட்டை விட வேறு பெரிய விஷயம் தங்களுக்கு இல்லை என்று புஷ்கர்-காயத்ரி தங்களது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.