துருவ் விக்ரம்மை டீலில் விட்ட மாரி செல்வராஜ்! அடுத்த படம் இவருடன்தான்!

வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:03 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது உதயநிதி ஸ்டாலின்தான் என்பது உறுதியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் கபடி பயிற்சியெல்லாம் எடுத்தார். ஆனால் இப்போது இந்த படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.

அதற்குக் காரணம் மாரி செல்வராஜ் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலினை இயக்க முடிவு செய்ததுதானாம். இந்த ஆண்டு இறுதியில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்