விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த மனோஜ் பாஜ்பாய்!

புதன், 27 அக்டோபர் 2021 (16:46 IST)
2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று முன்தினம் டெல்லியில் வழங்கப்பட்டன.

திரைத்துறையில் ஒவ்வொரு வருடமும் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதுகள் 2019 ஆம் ஆண்டுக்கு இரு தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. இதில் சிறந்த நடிகர்களான தனுஷ் மற்றும் மனோஜ் பாஜ்பாயி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதே போல சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் மனோஜ் பாஜ்பாய் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘சிறந்த திறமையாளரும், நடிகருமான என் நண்பர் விஜய் சேதுபதியை தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவருக்கு என் வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்