எப்போது முடிவெடுப்பார் மணிரத்னம்?

வியாழன், 20 ஜூலை 2017 (12:09 IST)
தன்னுடைய அடுத்த படத்தில் யார் நடிப்பது என்பதை, மணிரத்னம் இன்னும் முடிவே செய்யவில்லை என்கிறார்கள்.



 
‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் என்ன? அதில் யார் ஹீரோ? என்பது விவாதமாக இருந்து வருகிறது. ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகும் படத்தை இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. இன்னொரு பக்கம், ராம் சரண் – அரவிந்த் சாமி நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்றும், ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்த அதிதி ராவ் ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ‘அலைபாயுதே’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘ஆயுத எழுத்து’ படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக மாதவனுடன் இணைகிறார் என்கிறார்கள் மற்றொரு புறம்.

ஆனால், படக்குழுவினரிடம் விசாரித்தபோது, மாதவன் உள்பட 4 ஹீரோக்களிடம் மணிரத்னம் பேசியுள்ளார் என்றும், ஆனால் இன்னும் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறுகிறார்கள். காதலை மையப்படுத்திய தனது முந்தையப் படங்களில் இருந்து விலகி, இந்தப் படத்தை வேறொரு கோணத்தில் எடுக்க இருப்பதாகவும், இந்தப் படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்பது மட்டும் உறுதியான தகவல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்