மலையாள சேனலில் ஜட்ஜான தேவயானி

வெள்ளி, 2 அக்டோபர் 2015 (10:45 IST)
திருமணமான பிறகு தமிழ் சினிமா தேவயானியை ஒதுக்கிவிட்டது.


 

 
அவர் என்றில்லை, எந்த நடிகையானாலும் திருமணமானால் அவரை ஒதுக்கிவிடுவது தமிழ் சினிமாவின் குணம். துர்குணம் என்றும் சொல்லலாம்.
 
அதேநேரம் மலையாளத்தில், திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்பும் தேவயானி நடித்தார். அதுவும் சில படங்களில் நாயகியாக. பாலேட்டன் படத்தில் தேவயானியின் ஜோ‌டி, மோகன்லால்.
 
தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் நெடுந்தொடர் நாயகியாக விளங்கும் தேவயானி மலையாளச் சேனலான, மழவில் மனோரமாவின் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜட்ஜாக பொறுப்பேற்றிருக்கிறார்.
 
நிறைய மலையாளப் படங்களில் நடித்து, மலையாளிகளின் மனம் கவர்ந்ததால் இந்த வாய்ப்பு அவரை தேடி வந்திருக்கிறது.
 
ப்ரியாமணியும் மலையாள சேனல் ஒன்றில் நடனத்தை மையப்படுத்திய நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்