"மாஸ்டர்" ஷூட்டிங்கில் டேடியுடன் மாளவிகா மோகனன்- ஒரே அலப்பறை தான் போல!

சனி, 18 ஜனவரி 2020 (12:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகை மாளவிகா மோகனன் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். 
 
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தினத்தை குறிவைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . 
 
அடிக்கடி இப்படத்தின் அப்டேட், ஷூட்டிங் ஸ்பாட் தகவல் என ஏதாவது ஒன்று இணையத்தில் கசிந்து ட்ரெண்டாகி வருகிறது. அந்தவகையில் தற்போது  சென்னை காசிமேடு மற்றும் ராயபுரத்தில் நடந்து வரும் மாஸ்டர் படத்தில் படப்பிடிப்பிற்கு படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் தனது தந்தை  கே.யு. மோஹனனை அழைத்து வந்து படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துள்ளார். கே.யு. மோஹனன் இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்