பாலிவுட்டில் ஆக்சன் நாயகியாகும் மாளவிகா மோகனன்: சம்பளம் இத்தனை கோடியா?

வியாழன், 25 ஜூன் 2020 (07:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் சசிகுமார் ஜோடியாக ஒரு சின்ன கேரக்டரில் நடித்தவர் மாளவிகா மோகனன். ஆனால் அதன் பின் திடீரென ஜாக்பாட் அடித்ததால் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்
 
‘மாஸ்டர்’ திரைப்படம் வெளிவந்தால் மாளவிகா மோகனனுக்கு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் நிறைய வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் எதிர்பாராத வகையில் தற்போது அவருக்கு பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த ’மாம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய ரவி உத்யவார் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார் மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது 
 
இந்த படத்தில் ஆக்சன் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் என்றும் இதற்காக அவர் மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக தொடர்ச்சியாக 100 நாட்கள் கால்ஷீட் கொடுக்க மாளவிகா மோகனன் சம்மதித்து உள்ளதாகவும் இந்த படத்திற்காக அவருக்கு ரூபாய் 5 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்கவும் நடிகை மாளவிகா மோகனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்றும் செய்திகள் என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்