'வலிமை' படத்தின் முக்கிய அப்டேட் ! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

புதன், 7 ஜூலை 2021 (22:21 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில். அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டை மீண்டு கேட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில்,  வரும் ஜூலை 15 ஆம் தேதி வலிமை பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை பட இயக்குநர் ஹெச்.வினோத், வலிமை படத்தின் அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டதாகக் கூறி ரசிகர்களுக்கு இன்பதி அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல் வரும் ஜூலை 15 ஆம் தேதி ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்