என்ன ஆச்சு மகேஷ் பாபுவிற்கு..? 2 மாதங்களுக்கு சூட்டிங் கேன்சல்!

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (13:45 IST)
நடிகர் மகேஷ் பாபுவுக்கு கால் முட்டியில் அடிபட்டிருப்பதாகவும், அதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்வதற்காக அமெரிக்க செல்ல இருக்கிறார் என தகவல். 

 
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் ஸ்பைடர் படமும் தமிழில் வெளியானது. இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு கால் முட்டியில் அடிபட்டிருப்பதாகவும், அதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்வதற்காக அமெரிக்க செல்ல இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது. 
 
அறுவை சிகிச்சை முடிந்து ஹைதராபாத்திலேயே சிகிச்சை எடுத்துகொள்வார் என்று தெரிகிறது. சிறிது காலம் ஓய்வு எடுத்து அதன் பிறகே படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்றும் தெரிகிறது. இதனால் அவர் படப்பிடிப்புகளில் இரண்டு மாதங்களுக்கு கலந்துக்கொள்ள மாட்டார். 
 
இதனால் மகேஷ்பாபு தற்போது நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்