விக்ரமின் ‘மஹான்’ படத்தின் சென்சார் தகவல்!

திங்கள், 27 டிசம்பர் 2021 (13:00 IST)
நடிகர் விக்ரம் நடித்த ‘மஹான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படம் திரையரங்குகளில் வெளிவரும் என்று கூறப்பட்டது. 
 
ஆனால் இந்த படம் அமேசான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
அனேகமாக பொங்கல் தினத்தில் அல்லது அதற்கு அடுத்த வாரத்தில் இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. விக்ரம், துருவ் விக்ரம், வாணி போஜன், சிம்ரன் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் என்பதும் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்