பிரேமம் பட நடிகையும் இப்படித்தானா? வைரலாகும் புகைப்படம்!

வெள்ளி, 28 டிசம்பர் 2018 (17:45 IST)
'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்த 'காதலும் கடந்து போகும்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 


 
பிறகு கவண், ப.பாண்டி ஆகிய படங்களில் நடித்தவர், ஜுங்கா திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். 
 
இந்நிலையில் தற்போது 'ஹ்யூமன்ஸ் ஆஃப் சம் ஒன்' என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஒரு இளைஞருடன் தான் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.


 
அவர் யாரென்ற கேள்விகள் ரசிகர்கள் மனதை துளைத்து வரும் நிலையில், இசையமைப்பாளரான அந்த இளைஞர் மடோனாவின் ஆண் நண்பர், என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. 
 
இதனை அறிந்த அவரின் ரசிகர்களுக்கு ஒரு நிமிடம் இதயம் நின்றுவிட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்