மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:46 IST)
மாதவன் நடித்த ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மாதவன் சிம்ரன் நடிப்பில் மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராக்கெட்டரி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்குமேல் தயார் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் ஊரடங்கு உள்பட பல்வேறு காரணங்களால் ரிலீசாகவில்லை
 
இந்த நிலையில் தற்போது ‘ராக்கெட்டரி’ படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்