உண்மையைச் சொல்வேன், அதை உரக்கச் சொல்வேன் - இது மாதவன் பாலிஸி

சனி, 19 டிசம்பர் 2015 (13:19 IST)
மாதவன் கொஞ்சம் வித்தியாசமான நடிகர். தலைவா மன்றம் ஆரம்பிப்போம் என்று யாராவது வந்தால், போய் வா சகோதரா என்று வாசலோடு அனுப்புகிறவர். கசப்பான உண்மைகளையும் இனிப்பாக முன்வைப்பதில் மாதவன் ஒரு ஜென்டில்மேன்.


 
 
பல வருடங்களுக்குப் பிறகு அவர் நடித்த படமொன்று வெளிவருகிறது. அதன் ட்ரெய்லரை ஒரு பெரிய நடிகரை வைத்தோ, இயக்குனரை வைத்தோ வெளியிடுவதுதானே முறை. ஆனால், மாதவனின் இறுதிச்சுற்று ட்ரெய்லரை வெளியிட்டவர், மாதவன் நடிக்க வருகையில் பீல்டுலயே இல்லாத சிவ கார்த்திகேயன். மாதவனின் ட்ரெய்லரை வெளியிடுகிற அளவுக்கு அவர் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்று வயிறு எரிந்தவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கிறார் மாதவன். எப்படி?
 
"சிவகார்த்திகேயன் சிறந்த மனிதர். திறமையான நடிகர். மேலும் என்னை விட அதிக தமிழ் ரசிகர்களை கொண்டிருக்கிறார் என்று உண்மையை போட்டுடைத்து வயிறு எரிந்தவர்களின் மூக்குடைத்திருக்கிறார்.
 
மாதவன் யு ஆர் கிரேட்.

வெப்துனியாவைப் படிக்கவும்