'வாம்மா மின்னல்’ நடிகையை ஞாபகம் இருக்கா? அவர் நடித்த படம் ரிலீஸ்!

செவ்வாய், 23 நவம்பர் 2021 (14:59 IST)
'வாம்மா மின்னல்’ நடிகையை ஞாபகம் இருக்கா? அவர் நடித்த படம் ரிலீஸ்!
கடந்த 2000ம் ஆண்டு வெளியான சரத்குமார் நடித்த மாயி என்ற திரைப்படத்தில் \வாம்மா மின்னல்\ என்று கூறும் போது மின்னல் வேகத்தில் ஒரு நடிகை வருவார் என்பதும் அந்த காமெடி இன்றளவும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த கேரக்டரில் நடித்தவர்தான் நடிகை தீபா. அவர் தற்போது 21 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார். சசிகுமார் நடிப்பில் கதிர் இயக்கத்தில் உருவாகியுள்ள ராஜவம்சம் என்ற திரைப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
 
இந்த படத்தில்தான் ஒரு முக்கிய கேரக்டரில் வாம்மா மின்னல் புகழ் தீபா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்றும் அதன்பிறகு தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு சுற்று வருவேன் என்றும் நடிகை தீபா நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்