“கீர்த்தி & ஃபஹத் நினைத்தால் அடுத்த கட்ட ஷுட்டிங்…” உதயநிதி ஸ்டாலின் கொடுத்த ‘மாமன்னன்’ update

வெள்ளி, 24 ஜூன் 2022 (09:27 IST)
மாமன்னன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் பெருமளவில் படமாக்கப்பட்டுள்ளன.

மாமன்னன் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வந்த நிலையில் தற்போது முடிவ்டைந்துள்ளது. இது சம்மந்தமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் “இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் கீர்த்தி சுரேஷ் மற்றும், ஃபஹத் பாசில் இருவரும் தேதி கொடுத்தால்தான் நடக்கும். அதை பற்றி கொஞ்சம் யோச்ங்க. மாரி செல்வராஜ்,  one more காட்சிகளுக்கு sorry. நன்றி மாமன்னன் படக்குழு” எனத் தெரிவித்துள்ளார்.
 

And it’s the end of #MAAMANNAN 2nd schedule! Last and final schedule will happen only if @KeerthyOfficial Mam and #fahadh give dates

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்