கல்கியின் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த லைகா நிறுவனர் !

சனி, 5 நவம்பர் 2022 (19:11 IST)
பொன்னியின் செல்வன் என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டுள்ளதை அடுத்து கல்கியின் அறக்கட்டளைக்கு  லைகா நிறுவனர் சுபாஷ்கரன் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் சில திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில், இதற்கு முன் தமிழ் சினிமாவில் ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்த விக்ரம் உள்ளிட்ட படங்களின் வசூல்களை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளது.

இதையடுத்து இன்று சென்னையில் படத்தின் வெற்றி விழா நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டுள்ள நிலையில், இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 28 ஆம் தேதி என இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில்ம், லைகா பட நிறுவனம்  சுபாஷ்கரன் மற்ற்ம் இயக்குனர் இணைந்து கல்வி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியை  கல்கி அவர்களின் மகன் கல்கி, ராஜேந்திரன் வழங்கியுள்ளனர்.
 
Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்