பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் லொஸ்லியா மீண்டும் கவினுடன் சென்று மொக்கை போடுகிறார். அதாவது, "சாரி, நீ நடிக்கிறாய் என்று சொன்னதற்கு என கவினிடம் கூறி மீண்டும் அவருடன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
பிக்பாஸில் லொஸ்லியாவுக்கு கிடைத்த வரவேற்பு கொஞ்சம் நாட்கள் கூட நீடித்திருக்கவில்லை. காரணம் அவர் கவினுடன் சேர்ந்த அந்த நட்பு தான். பின்னர் சாக்ஷி கவினுக்கும் இடையே காதல் ஆரம்பித்த நாளிலிருந்தே லொஸ்லியா தேவையில்லாமல் மூக்கை நுழைத்து தனது பெயரை கெடுத்துக்கொண்டார். இதனால் லொஸ்லியா ஆர்மிஸ் அவரை வெறுத்து விட்டனர்.