கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.
அதற்கு பதிலளித்த லோகேஷ் “இயக்குனர் வெற்றிமாறன் சாரைதான். அவரிடம் ஏற்கனவே மூன்று முறை வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார். லோகேஷின் லியோ படத்தில் மிஷ்கின், அனுராக் காஷ்யப் மற்றும் கௌதம் மேனன் ஆகிய மூன்று இயக்குனர்கள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.