தளபதி 67 படத்தின் ப்ரமோஷன் டீசரை கமலுக்கு காண்பித்த லோகேஷ்!

செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:31 IST)
விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடந்து வருகிறது.

விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது.

இப்போது முக்கியமான சில ஆக்‌ஷன் காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகிறார். அதன் பிறகு காஷ்மீரில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோவை லோகேஷ் படமாக்கி இருந்தார். அதை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் இந்த டீசர் காட்சியை இயக்குனர் லோகேஷ், கமல்ஹாசனுக்குக் காண்பிக்க, அவர் பார்த்துவிட்டு லோகேஷைப் பாராட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்