லோகேஷ் கனகராஜ் முதல் தயாரிப்பு: டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

புதன், 29 நவம்பர் 2023 (18:07 IST)
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.  அவருடைய ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு  திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்திற்கு ஃபைட் கிளப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. உறியடி விஜயகுமார் முக்கிய கேரக்டரில் நடிக்கும்  இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளார். அப்பாஸ் அகமது இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக  ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

உறியடி விஜயகுமார் அட்டகாசமான போஸில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருப்பதை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்