விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் ரிலீஸூக்கு பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் பல கோடிக் கணக்கில் நஷ்டமடையக் கூடும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது லைகர் திரைப்படம் திரைப்படம் 5 மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகியுள்ளது.