''வெற்றி உன்னை சூடிக்கொள்ளட்டும்''- மாரி செல்வராஜை பாராட்டிய பா.ரஞ்சித்

வியாழன், 29 ஜூன் 2023 (12:25 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தை  இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார்.

உதயநிதி நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  மாமன்னன். இப்படத்தில்  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், இன்று வெளியாகி இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று வெளியான இப்படத்தைப் பார்த்த முதல்வர் முக.ஸ்டாலின் இப்படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இதுபற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு . @mkstalin ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த  நிலையில், தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் தன் டுவிட்டர் பக்கத்தில்,  வெற்றி உன்னை சூடிக்கொள்ளட்டும் என்று மாரி செல்வராஜை பாராட்டியிருந்தார்.

இதற்கு மாரி செல்வராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் Love u anna என்று தெரிவித்துள்ளார்.

Love u annna @beemji ❤️❤️❤️❤️ https://t.co/UYXPX4lA3Q

— Mari Selvaraj (@mari_selvaraj) June 29, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்