தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் பொறுப்பில் இருந்த எஸ்.வி.சேகர், நேற்று முன்தினம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் மூத்த நடிகர்கள் மரியாதையாக நடத்தப்படவில்லை என அவர் காரணம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்துப் பேசிய எஸ்.வி.சேகர், “நட்சத்திரக் கலைவிழாவில் கலந்துகொள்ள அஜித்தையும் அழைத்தோம். மக்கள் காசு கொடுத்து வாங்கும் டிக்கெட்டில் இருந்துதான் நாம் சம்பாதிக்கிறோம். எனவே, நாமே காசு போட்டு நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டலாம் என்று சொன்ன அஜித், விழாவுக்கு வர மறுத்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.