அடுத்த மாசம் LEO படத்துக்கு ரெண்டு அப்டேட் வரும்! தேதிகள் இதுதான்!?

புதன், 16 ஆகஸ்ட் 2023 (12:28 IST)
நாளுக்கு நாள் விஜய் நடித்துள்ள லியோ படம் குறித்து ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கும் நிலையில் அடுத்த மாதத்தில் இரண்டு அப்டேட்டுகள் வரும் என கணித்துள்ளனர்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து தயாராகியுள்ள படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், திரிஷா, பிரியா ஆனந்த் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பிறகு சிங்கிள் பாடல் வெளியாகி கடும் வைரலானது.

அக்டோபரில் படம் ரிலீஸாக உள்ள நிலையில் இடையே படத்தின் முக்கிய நடிகர்களின் பிறந்தநாள்களில் அவர்களது கேரக்டர் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக அவ்வாறு சஞ்சய் தத்தின் ஆண்டனி தாஸ் கதாப்பாத்திரத்தின் ப்ரோமோ வெளியான நிலையில் நேற்று அர்ஜூனின் பிறந்தநாளுக்கு அவரது ஹரால்ட் தாஸ் கேரக்டர் ப்ரோமோ வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் செப்டம்பரில் 17ம் தேதி ப்ரியா ஆனந்த் பிறந்தநாளும், 20ம் தேதி மிஷ்கின் பிறந்தநாளும் வருகின்றது. இதனால் அவர்களது பிறந்தநாளில் அவர்களது லியோ பட கேரக்டர் ப்ரோமோ வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் லியோ படம் அக்டோபர் 19ல் வெளியாக உள்ள நிலையில் அதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் செப்டம்பர் இறுதியில் வெளியாகலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்