பிரபல நடிகரை வைத்து மீண்டும் லியோ ஷூட்டிங்கை நடத்தும் லோகேஷ்!

வியாழன், 27 ஜூலை 2023 (09:44 IST)
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் நான்கே படங்களில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்று வரும் நிலையில் முன்னணி நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர்.

தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் இப்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

லியோ ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரே ஒரு நாள் மட்டும் நடிகர் சஞ்சய் தத்தை வைத்து சில காட்சிகளை மீண்டும் எடுக்க உள்ளாராம் இயக்குனர் லோகேஷ். விரைவில் அந்த ஒருநாள் ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்