லியோ படத்தின் இசை வெளியீட்டு தேதி இதுதானா? லேட்டஸ்ட் தகவல்!

சனி, 5 ஆகஸ்ட் 2023 (08:14 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அவர் தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் இப்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து நான் ரெடிதான் வரவா என்ற பாடல் வெளியாகி நல்ல ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடக்கும் என சொல்லப்படுகிறது.

லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்