ரிலீசுக்கு முன்பே ஆப்பு தயார்: 'சரவணன்' உதயநிதிக்கு வந்த சோதனை

வியாழன், 11 மே 2017 (23:41 IST)
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டபோது, ஒரு படத்தை விமர்சனம் செய்யுங்கள் தவறில்லை, ஆனால் தயவுசெய்து மூன்று நாள் கழித்து விமர்சனம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்



 


அதேபோல் 'சரவணன் இருக்க பயமேன்' பட நாயகனான உதயநிதி, அந்த படத்தின் பிரஸ்மீட்டில் 'இந்த படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் செய்யுங்கள், இல்லையென்றால் மூன்று நாள் கழித்து கடுமையாக விமர்சனம் செய்யுங்கள்' என்று கேட்டுக்கொண்டார்

இந்த நிலையில் நாளை தமிழகம் முழுவதும் 'சரவணன் இருக்க பயமேன்' படம் வெளியாகவுள்ளது. ஆனால் படம் வெளீயாகும் முந்தைய நாளான இன்றே பிரபல இணையதளம் ஒன்று இந்த படத்திற்கு கழுவி கழுவி விமர்சனம் எழுதியுள்ளது இரட்டை அர்த்த வசனங்கள், சுத்தமாக கதையே இல்லாத ஒரு படம், சுமாரான பாடல்கள், மோசமான இசை என ரிலீசுக்கு முன்பே ஆப்பை சரவணன் உதயநிதிக்கு தயார் செய்ததோடு, இந்த படத்திற்கு வெறும் 1.5/5 ரேட்டிங் என்று கொடுத்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்