பாய்ஸ், சச்சின்,வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் தனது குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ள ஜெனிலியா முடிவெடித்துள்ளார். பின்னர் இதுகுறித்து வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடலாம் என எண்ணியிருந்தபோது,தவறுதலாக கீழே விழுந்து கையில் எலும்பு முறிந்துவிட்டது.