’’தலைவி’’ பட நடிகையின் டுவிட்டர் அக்கவுண்ட் சஸ்பெண்ட்

செவ்வாய், 4 மே 2021 (16:55 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தவர் கங்கன ரணாவத். இவர் ஆக்சிஜன் பயன்பாடு தரத்தை உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் நேற்று ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், கொரொனா இரண்டாம் அலை பரவுவதால் எல்லோரும் ஆக்ஸிஜன் உற்பத்தியைப் பெருக்கி வருகின்றனர்.  அவை இந்தச் சுற்றுச்சூழலிலிர்ந்து  எடுத்திருப்பார்கள். எனவே  இயற்கையிலிருந்து எடுப்பவர்கள் காற்றிலு நிவாரணம் கொடுக்க வேண்டும். காற்றின் தரத்தை உயர்த்த நாம் உறுதி மொழி எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்..

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் அக்கவுண்ட் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.  மேலும், இந்த் டுவிட்டர் பக்கத்திலிருந்து அவரது கணக்கு அகற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.  கங்கனா அடிக்கடி சர்ச்சைக்குரிய தகவல்கள் பதிவிடுவதால் இதுபோன்ற நடவடிக்கையை டுவிட்டர் நிறுவனம் எடுத்திருக்கலாம் எனத்தகவல் வெளியாகிறது.
 

4 May 2021
BREAKING NEWS !
Today the virus of twitter Kangana Ranaut , has been removed from twitter !! #कंगना_तुम_कहाँ_हो pic.twitter.com/GlNWq8XwTb

— Rana chahal (@Rana_Baljit_) May 4, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்